Tuesday, May 4, 2010

சுறா- அய்ய்ய்ய்ய் சனியன்.

எங்கள் இளைய தளபதி வருங்கால சூப்பர் ஸ்டார் டாக்டர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த சுராவை பார்க்கும் வாய்ப்பை நானாக ஏற்படுத்திக்கொண்டேன் காரணம் நான் விஜய் ரசிகனல்லவா. வழக்கமாக வெற்றியில் வேலை செய்யும் போது அலுவலக நண்பர்கள் அண்ணன்மார்களுடன் செல்வது வழக்கமாக இருந்தாலும் இப்போது அங்கேயும் இல்லை என்பதால் சக பதிவரும் நண்பருமான மதுரகன் அண்ணாவுடன் செல்ல முடிவெடுத்தேன்.(மதுரகன் அண்ணா தீவிர தல ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த படத்துக்கு எல்லோரும் விமர்சனம் எழுதியாகிவிட்டது இனி எதற்கு என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என் பார்வை இந்த படத்தில் எப்படி இருக்கின்றது என்று அறிய சில வலைப்பதிவர்களும் என் மூஞ்சிப்புத்தக நண்பர்களும் என்னோடு இன்றும் தொடர்பில் இருக்கும் என் வெற்றி நேயர்களும் சில நண்பர்கள் தனியாக பேசும் போது கேட்டுக்கொண்டதாலும் எழுதுகின்றேன்.


காலை பத்து முப்பதுக்கு படம் காண்பிக்கப்படும் என்ற நிலையில் பத்து நிமிடத்துக்கு முன்னதாக திரை அரங்குக்கு சென்றால் பெரிய ஒரு லைன் நின்றது. டிக்கெட் கிடைக்குமா என்ற சின்ன சந்தேகம் வந்தாலும் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்தார் மதுரகன் அண்ணா. சரி என்று கையில் ஒரு தண்ணீர் போத்தலை வாங்கிக்கொண்டு அந்த லைனில் நின்றால் ஒருவர் வந்து சொன்னார் இன்று படம் பதினோரு மணிக்காம் என்று. சற்று நேரத்தில் போலீசார் வந்து சின்ன ஒழுங்குபடுத்தல் செய்தனர் அங்கே நின்ற எம்மை. காரணம் ஒரு சிலர் லைனில் நிற்காமல் வழக்கமாக மோதகம் வடை வாங்கும் இடத்தில் முன்டியடிப்பதுபோல நின்றதே. அதிகம் ஆண்களாக காணப்பட்ட அந்த இடத்தில் சில முச்சக்கர வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் வந்திறக்கி நம்ம தளபதியின் புகழை பரப்பினார்கள். (அந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் இந்த வயசிலேயே வாழ்க்கையில் இப்பிடி கஷ்டம் இருக்கென்று விஜய் படத்தை காட்டி பழக்கப்படுத்துகின்றார்கள் என்ன ஒரு பெற்றோர்.) ஒருவாறு டிக்கெட் வழங்கும் இடத்துக்கு செல்லும் அந்த கம்பிக்குள் நுழைந்தால் என்னால் உள்ளே செல்ல கடினமாக இருந்தது. அடபாருங்கப்பா இப்பிடி உடம்பு போடிதே. தளபதிகிட்ட தனியா ஒரு அட்வைஸ் கேட்கணும் உடம்பை சிக்கென்று வைத்திருக்க.(அட கான்கொன் இந்த கேள்வி உன்னிடம் தானப்பு என்னாலேயே போக முடியல உன்னாலே எப்பிடி மகனே?)

ஒருவாறு டிக்கெட்டோடு உள்ளே சென்று நமக்கு ஏற்ற இடத்தில் அமர்ந்து கொண்டால் எனக்கருகில் இருந்தவர்கள் சகோதர மொழி பேசுபவர்கள். மொழி தெரியாமல் இவர்கள் படம் பார்க்கப்போரார்களா என்று பார்த்தால் கொஞ்ச நேரத்திலேயே தமிழில் பேசி பாலை வார்த்தார்கள். அரங்கு நிறைய படம் ஆரம்பமானது. நவீன் செரமிக்கென்று நினைக்கின்றேன் ஒரு பெண் நடனமாடும் விளம்பரத்தை காட்ட விசில் பறந்தது. அதனை தொடர்ந்து நாணயத்தில் விஜயின் ஐம்பதாவது படம் என்று வந்தபோதும் கலாநிதி மாறன் பெயர் வந்தபோதும் விசில் காதைக்கிழித்தது.(கலாநிதி மாறனுக்கு இந்தியாவில் விசில் பறந்தால் அதில் கொஞ்சமேனும் ஆச்சரியமில்லை ஆனால் இலங்கையில் என்னும் போது கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன்.)


படத்தின் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். பலர் படத்தில் கதையே இல்லை என்றாலும் நான் இதை ஏற்கமாட்டேன். காரணம் இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட மையக்கருத்து சரியானதே. நல்ல கதை ஆனால் அதை சொன்ன விதம் தப்பாகிப்போனதால் தான் பலருக்கு இந்தப் படத்தில் கதை என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது என்ற எண்ணம் வரக்காரணம். அடுத்து அறிமுகக்காட்சி, குருவி படத்தில் அறிமுகக்காட்சி பார்த்தவுடனேயே இந்த படம் போணியாகாது என்று கணித்தவன் நான். ஆனால் இந்த அறிமுகம் எனக்கு உண்மையில் பிடித்தது. காரணம் இது விஜய் படம் லாஜிக் எல்லாம் பார்க்கப்படாது. அடுத்து முதல் பாடல் வழக்கத்தை விட குத்து குறைவு அதேபோல விஜயின் வேக நடனமும் இந்தப்பாட்டில் குறைவு. வழக்கமான விஜய் படமாக ஆரம்பிக்கின்றது எனவே ஏமாற்றம் இருக்காது என்று நம்பினேன். அதை மெய்பிப்பது போல அடுத்து வந்த காட்சிகள் நன்றாக இருந்தன. சரி பரவாயில்லை விஜய் சேப்டியாக பிளே பண்ணிறார் என்று நினைக்கின்றேன். காரணம் ஐம்பதாவது படம் படுத்துவிடக்கூடாதே என்று. உண்மையில் சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது. ஓடிவிடும்.

விஜயை பொறுத்தவரை இந்த படத்தில் ஸ்டைலிஷாக இருக்கின்றார். நடனத்தில் வழக்கம் போல அசத்துக்கின்றார். என்னதான் இருந்தாலும் தமன்னாவின் ஜீன்சை இழுத்து இழுத்து விடுவதெல்லாம் ரொம்ப ஓவர். பார்ப்பதற்கே அருவருப்பாய் இருந்தது. அடுத்து நடிப்பு இதில் ஒரு விடயம் பலரின் கருத்தாக இருக்கின்றது விஜய்க்கு நடிக்கத் தெரியாதென்று. அதை உண்மையில் ஏற்கமுடியாது. காரணம் விஜய்க்குள்ளும் நல்ல நடிகன் இருக்கின்றார் அவரின் மசாலா படங்களில் அவரால் இதைவிட ஒன்றும் செய்ய முடியாமல் போகின்றது. வருகின்றார் கண்ணை உருட்டுகின்றார், பின்பக்கத்தை ஆட்டுகின்றார், நாலு நெளிப்பு நெளிக்கின்றார், ஒரு சில இடங்களில் ரஜினி விஜயகாந்த் போல பக்கம் பக்கமாய் வசனம் பேசுகின்றார், அப்புறம் வாயை திறக்காமல் போக்கிரி வேட்டைக்காரனில் பேசியதில் அச்சும் பிசகாமல் பன்ச் டயலாக் பேசுகின்றார். தமான்னாவை ஜொள்ளு விடுகின்றேன் என்று தன முந்தைய படங்களில் செய்த குரளி வித்தையை காடுகின்றார். (முன்னைய படங்களில் செய்யும் போது புதிதாக இருந்ததால் ரசித்தோம் இப்போது புளித்துப் போய்விட்டது தளபதி) இவை எல்லாவற்றையும் தாண்டி சுராவில் முழுதாய் தாங்குவது விஜய்தான்.


அடுத்து வடிவேல். வைகைப்புயல் நகைச்சுவைப்புயல் என்றெலாம் இனி கொண்டாட முடியாதோ. இப்போது இவரை விட சந்தானம் நன்றாக சிரிக்கவைக்கின்றார். கொஞ்சம் கூட சரக்கு இல்லை. ஆனால் அவரின் பிளஸ்சே திரையில் பார்த்ததுடன் நாம் சிரிப்பதுதான். அதுவும் விஜயும் வடிவேலுவும் சேரும் போது தானாகவே சிரிப்பு வருகின்றது. விஜய் வடிவேல் காம்பிநேசனில் நான் சச்சின்,பகவதி,வசீகரா போன்ற படங்களை அதிகம் ரசித்தேன் ஆனால் இதில் அந்த படங்களில் இருந்த சரக்கில் நூறில் ஐந்து கூட இல்லை. வடிவேல் தன சரக்கை புதுப்பிக்க வேண்டும் இல்லையேல் தமிழ் திரை உலகிற்கு பாரிய இழப்பு. காரணம் வடிவேல் போல அடுத்த தலைமுறை ஜாம்பவான் நகைச்சுவை நடிகர் என்று இன்னும் யாரும் வரவில்லை.

தமன்னா அக்கா. யார் இவரை தூக்கி வைச்சு கொண்டாடினாலும் எனக்கு தமன்னாவை பிடிப்பதில்லை. சுடுதண்ணீர் ஊற்றுப்பட்டு வெந்து போனது போன்ற தோல். அகண்ட வாய் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாத வெறுமை என்று கண்ணில் காட்டக்கூடாது. என்னை பற்றி நல்லாய் தெரிந்து வைத்திருப்பார் போல இயக்குனர் ராஜகுமார். அந்தளவிற்கு தமன்னாவை பயன்படுத்தி இருக்கின்றார். தமன்னா வந்தால் அடுத்து பாடல் வரப்போகின்றது என தெரிந்து விட்டது. இதை விட கதாநாயகியே இல்லாமல் நடிக்கலாம் தளபதி. பாடலுக்கு நாயகி வேண்டுமென்றால் ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பெரிய நாயகியை ஒப்பந்தம் செய்யலாம். எப்பிடி என் புது ஐடியா? இதைவிட தமன்னாவை பற்றி சொல்ல எதுவும் இல்லை. அதுவும் அந்த மேக்கப் போட்டிட்டு சாகாப்போவது என்ன ஒரு கண்டு பிடிப்பு. இதில் இன்னொரு விடயம் சொல்லணும் நாய் ரமேஷை காணவில்லை என்று தமன்னா சாகவரும் போது காப்பாற்றி விட்டு விஜய் சொல்வாரே ஒரு டயலாக் ஒரு ரமேஷ் இல்லாட்டி என்ன ஒரு சுரேஷோ அல்லது தினேஷோ கிடைக்காமலா போய்டுவான் என்று. அப்போது ஒருவர் கத்தினார் அடோ என் பெயர் சுரேஷ் தான் வாடி தமன்னா செல்லம் என்று. நானும் கொஞ்சம் பயந்திட்டன் ரைமிங்கில்கில் சதீஷ் என்று சொல்லி தமன்னா பிசாசிடம் என்னையும் மாட்டி விடுவார் என்று. அப்பாடா தப்பிட்டன். தமன்னா ரசிக சிகாமணிகள் என்னை தேடுவது தெரிகின்றது. கூல்...


அடுத்து வில்லன் கில். பார்த்தவுடன் மதுரகன் அண்ணா சொன்னார் அபிஷேக் பச்சன் போல இருக்கின்றார் என்று. ஆனால் எனக்கோ அவர் வில்லத்தனம் பார்த்து நினைவுக்கு வந்தது நியூட்டனின் மூன்றாம் விதி அசல் படங்களில் வந்த வில்லன் ராஜீவ் கிருஷ்ணா. வில்லனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. இவரைவிட பிரகாஷ்ராஜ் இந்த பாத்திரத்தை கூட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் கருத்து. வழக்கமான விஜய் பட வில்லன்களுக்கு கொஞ்சம் பவர் புல்லான கதாபாத்திரம் இருக்கும் இதில் அது மிஸ்ஸிங். ஸ்ரீமன் வழக்காமாய் விஜய் நண்பனாக வருபவர் இப்போது வில்லனின் கையாள். இளவரசு விஜய் புகழ் பாட வில்லனுடன். இந்த படம் பார்க்கும் போது எனக்கு நினைவு வந்தது அசல் காரணம் அதில் தல புராணம் இதில் தளபதி புராணம் முக்கியமானதாக இருந்தது மற்ற எல்லாவற்றையும் விட. தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை நாயகர்கள் இருவரும் இப்படி சுய புராணம் பாடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. யுவராணி இன்னும் அழகாக இருக்கின்றார்.

முன்பாதி பெரிதாக சோம்பல் அடிக்காமல் போய்விட்டது ஆனால் பார்த்துப் பார்த்துப் புளித்த திரைக்கதை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அதில் கூட சில ரசனை இருந்தது இதை கொடுக்க விஜய்யால் மட்டும் தான் முடியும் என்பதை மறுக்கமுடியாது. புளித்துப்போனதைக்கூட கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்ததை தான் சொல்கின்றேன். எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்தது அந்த மீனவ கிராமத்தை சொல்ல மறந்திட்டன் யாழ் நகர் எரித்த பின் விஜய் எழுந்து வரும் காட்சி கொஞ்சம் நம்பும்படி இருக்க அந்த சிலையை விஜய் தூக்கிக்கொண்டு எழும்புவது ஓவர். அதில் சாமி என்று பாட்டு வேறு அந்த நேரம் மதுரகன் அண்ணா சொன்ன வார்த்தைகள் யதார்த்தம் அதாவது வர வர தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு ப்ரோமோசன் கூடிக்கொண்டே இருக்கின்றது என்றார். ஆனால் இதை எல்லாம் எம்.ஜி.ஆர்-ரஜினி செய்யவில்லையா அவர்கள் செய்ததை இப்போது அப்படியே விஜய் செய்கின்றார். சிவாஜியில் ரஜினி சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று பஞ்ச பேசிக்கொண்டு அடிப்பாரே எத்தனை பேரை ராஜா அதனுடன் ஒப்பிடும் போது சுறாவில் விஜய் அடிக்கும் வில்லன்கள் எண்ணிக்கை குறைவு. (வழக்கமாக விஜய் படங்களின் அடியாட்களை விட குறைவு.)

தமன்னாவுடன் காரில் வரும் போது வீதியில் பிடிக்கும் சண்டை ரொம்ப ஸ்டைலிஷா இருந்தது. எனக்கு படத்தில் பிடித்த ஒரு சில காட்சிகளில் இதுவும் ஒன்று. அதுக்காக படமே பிடிச்சுப்போச்சென்று தப்புக்கணக்கு போடப்படாது. முன்பாதி முடிய மதுரகன் அண்ணாவை பார்த்தேன். ஓரளவு பரவாயில்லை என்றார். விஜயின் வழக்கமான படம் என்பதே அவர் கருத்து. அதுசரி அவரும் அசல் பார்த்து நொந்து போனவர் ஆச்சே. இரண்டாம் பாதி தொடங்கியவுடன் விஜய் பணக்காரன் ஆகிவிடுகின்றார் அதன் பிறகு நடை உடை என்று எல்லாமே ஸ்டைலாக இருக்க கொஞ்சம் எழுந்து உட்கார்ந்த்தேன். ஏதோ ஒன்று படத்தில் இருக்குப்போல என்று. ஆனால் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே அப்பிடி எல்லாம் தப்பாய் நினைக்கப்படாது என்று சொல்லிவிட்டார் இயக்குனர். இருப்பினும் விஜய் இன்னும் அழகாய் இருக்கின்றார் அதை விட அந்த மேனரிசத்தை நான் ரசித்தேன்.

ரியாச்கானை டம்மி பீசாக்கி இருக்கின்றார்கள். விஜயும் ரியாசும் மோதி இருந்தால் நன்றாக இருக்கும் அதுவும் அந்த நீதி மன்ற காட்சி எங்களுக்கு பிடித்திருந்ததோ இல்லையோ குழந்தைகளுக்கு பிடித்திருக்கு போல அந்த திரை சத்தத்திலும் அந்த காட்சியில் ஒரு குழந்தை திரை அரங்கில் இருந்து போட்ட சத்தம் டண்டணக்கா டனக்கு டக்கா.(இது விஜய்க்காக போட்டதா அல்லாது விஜயை விட இப்போ குழந்தைகளுக்கு டி.ஆரை பிடிக்குதோ) கிளிமக்ஸ் பற்றி சொன்னால் படம் பார்த்த திருப்தியை கொடுக்கவில்லை. அந்தளவிற்கு சொதப்பல் கிளைமாக்ஸ். பின்னணி இசை என்ற ஒன்று படத்தில் இருந்ததா? யாராவது திரும்ப பார்த்தால் சொல்லுங்கள். சுருக்காமாக சொல்லப்போனால் சுறா விஜயை மட்டும் மட்டும் ரசிக்க ஒரு வலை. மற்றும் படி எதுவுமே இல்லை. என்னது விஜயின் ஐம்பதாவது படமா? அய்ய்ய்ய்ய்ய் யாரை ஏமாத்தப்பார்க்கிறிங்க இது விஜயின் முப்பத்தோராவது படம் என்ன பார்க்கிறிங்க? நீங்கள் தமிழன் படம் பார்த்திருக்கின்றீர்களா? பார்க்காட்டி போய் பாருங்க சுராவும் தமிழனும் ஒன்று.

தலைப்புக்கும் அர்த்தம் சொல்லணும் எல்லா ஒரு காட்சியில் விஜய் கைவிரல்களை ஒரு மாதிரி மடித்துக் கொண்டு வடிவேலுவை பார்த்து அய்ய்ய்ய் என்பாரே அப்பிடி தான் எனக்கு படம் பார்க்கும் போது இருந்தது அதாவது அய்ய்ய் நம்மளை எல்லாம் ஏமாற்ற முடியாது. அடுத்து சனியனுக்கும் அர்த்தம் இன்னொரு காட்சியில் வில்லனிடம் இளவரசு சொல்வார் அவன் உங்களுக்கு சனியன் என்று உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு சுறா சனியன் அதிலும் பதிவர்கள் பலருக்கு. அதை விடுத்து விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் கூட சனியன்தான். இந்த சனியன் எப்பதான் கலையுமோ?


படம் இன்னும் பார்க்கப்போகலையா? உங்களுக்கு தான் இது. நீங்கள் திருப்பாச்சி சிவகாசி மதுர வேட்டைக்காரன் எல்லாம் பார்த்து ரசிச்சவங்களா? அப்போ கவலையை விடுங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு அக்சன் படத்தையும் விஜயையும் ரசிக்கணும் என்று மட்டும் நினைத்தால் சுறா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் அதை விடுத்து நம் பதிவர்கள் பாசையில் சொன்னால் விஜய் படம் என்ன ஆஸ்கார் படமா?
Share:

30 கருத்துரைகள்:

"ராஜா" said...

//சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது

அண்ணன் உங்களுக்கு சுறா பாத்துட்டு மூளைக்கு மூலம் வந்துடுச்சா... இப்படி கற்பனை நிக்காம கொட்டுதே..

//இவரைவிட பிரகாஷ்ராஜ் இந்த பாத்திரத்தை கூட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் கருத்து.

ஏன் அவரையுமா அசிங்கபடுத்தனும் .. பாவம் அவரு விட்டுடுங்க ...

//இளவரசு விஜய் புகழ் பாட வில்லனுடன். இந்த படம் பார்க்கும் போது எனக்கு நினைவு வந்தது அசல் காரணம் அதில் தல புராணம் இதில் தளபதி புராணம்

அசல் சரவண பவன் இட்லி சாம்பார் , இது புளிச்சி போன தயிர் சாதம்...


//ஆனால் அதில் கூட சில ரசனை இருந்தது இதை கொடுக்க விஜய்யால் மட்டும் தான் முடியும் என்பதை மறுக்கமுடியாது

நீங்கலாம் இருக்கிற வரைக்கும் விஜய் திருந்தவே மாட்டாரு.... ஜனா படம் எங்களுக்கு இப்படிதான் இருந்துச்சி...

//ஆனால் இதை எல்லாம் எம்.ஜி.ஆர்-ரஜினி செய்யவில்லையா அவர்கள் செய்ததை இப்போது அப்படியே விஜய் செய்கின்றார்.

கர்ஜனை சிங்கம்தான் செய்யனும் ... குரங்கு ட்ரை பண்ணுனா கேவலமாத்தான் இருக்கும்.. ரஜினியுடன் விஜயை சேர்த்து வைத்து பேசாதீர்கள்

//அதுசரி அவரும் அசல் பார்த்து நொந்து போனவர் ஆச்சே

கண்டிப்பா இருக்காது தல அவர் அஜித் ரசிகராய் இருந்தால்

Bavan said...

ஹாஹாஹா... கடைசில எல்லாரும் விஜயக் கைவிட்டாலும் நீங்களாவது விஜய்ட மானத்த காப்பாத்த நினைச்சீங்களே..:p

படத்தோட பெயர் சுறாவா? சுர்ர்ர்ர்ர்றாவா?...:p

//அடுத்து வடிவேல். வைகைப்புயல் நகைச்சுவைப்புயல் என்றெலாம் இனி கொண்டாட முடியாதோ. இப்போது இவரை விட சந்தானம் நன்றாக சிரிக்கவைக்கின்றார்//

ஹீஹீஹீ அவர்கள் இருவரைவிடவும் விஜய் எண்டு ஒருத்தர் நல்லா சிரிக்க வைக்கிறாராம்...:p

சுறா படம் பார்க்காதோர் சங்கத்துக்கு என்னைத் தலைவராக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.. அதுதான் பார்க்கலாமா வேண்டாமான்னு யோசிக்குறேன்.. ம்ம்.. சு.ப.பா சங்கத்தலைவரான பிறகு சன் டிவில போட்டா பார்க்கலாம் என்று முடிவு..:p

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

////சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது

அண்ணன் உங்களுக்கு சுறா பாத்துட்டு மூளைக்கு மூலம் வந்துடுச்சா... இப்படி கற்பனை நிக்காம கொட்டுதே..//

உண்மையை ஒத்துக்கொள்ள பழகவேண்டும் ராஜா. தொடர் தோல்விகள் தான் உங்கள் தலைக்கு ஆனால் விஜயின் தோல்வி என்று சொல்லும் படங்கள் கூட வசூலில் ஏமாற்றாது. சுராவும் விஜயை ஏமாற்றாது.உங்களுக்கு கொஞ்சம் கூட சினிமா தெரியாதா? அஜித்தை பற்றி பேசக்கூடாதென நினைத்தேன் பேச வைக்கின்றீர்கள்.

////இவரைவிட பிரகாஷ்ராஜ் இந்த பாத்திரத்தை கூட சிறப்பாக செய்திருப்பார் என்பது என் கருத்து.

ஏன் அவரையுமா அசிங்கபடுத்தனும் .. பாவம் அவரு விட்டுடுங்க //

ஒருவர் நன்றாக செய்தால் அவரை அசிங்கப்படுத்திரதென்று அர்த்தமா? இதிலேயே விஜய் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு சொல்லாமல் வெளிவருகின்றது

////இளவரசு விஜய் புகழ் பாட வில்லனுடன். இந்த படம் பார்க்கும் போது எனக்கு நினைவு வந்தது அசல் காரணம் அதில் தல புராணம் இதில் தளபதி புராணம்

அசல் சரவண பவன் இட்லி சாம்பார் , இது புளிச்சி போன தயிர் சாதம்...//

உங்களைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை அஜித் திருந்தமாட்டார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல என்னது அசல் ஹி ஹி போங்க சிரிப்பு வருகுதுங்க.

////ஆனால் இதை எல்லாம் எம்.ஜி.ஆர்-ரஜினி செய்யவில்லையா அவர்கள் செய்ததை இப்போது அப்படியே விஜய் செய்கின்றார்.

கர்ஜனை சிங்கம்தான் செய்யனும் ... குரங்கு ட்ரை பண்ணுனா கேவலமாத்தான் இருக்கும்.. ரஜினியுடன் விஜயை சேர்த்து வைத்து பேசாதீர்கள்//

அதில் அஜித்தை போட்டிருந்தால் பூம் பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுவின்கள் உண்மைகள் கசந்தாலும் ஒத்துக்கொள்ள பழகுங்கள். அஜித்துக்கு இருக்கும் நல்ல மனது கூட அவர் ரசிகர்கள் உங்களுக்கு இலையே. இதுதான் கீழ் தரமென்று சொல்வது.

////அதுசரி அவரும் அசல் பார்த்து நொந்து போனவர் ஆச்சே

கண்டிப்பா இருக்காது தல அவர் அஜித் ரசிகராய் இருந்தால்//

அதுசரி தலையின் கேவலமான படத்தை பார்த்தும் உங்களைப்போல வலிக்காமல் நடிக்க அவருக்கு தெரியாதாக்கும். அப்பு நீங்களே சொல்லிட்டிங்க அசல் தல ரசிகர்கள் சிலருக்கு தான் பிடிக்குமென்று. எப்புடி....இதற்க்கு மேல் மதுரகன் அண்ணா தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும் அவர் யார் ரசிகர் என்று.

SShathiesh-சதீஷ். said...

@Bavan
அடப்பாவிங்களா நான் சுராவை கிழித்திருக்கேன் புரிஞ்சு கொள்ளுங்க முடியல அழுதிடுவேன். விஜய் என்ன செய்தாலும் கிழிக்கிரமாதிரி இப்போ நமக்குமா?

ARV Loshan said...

உண்மையில் சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது. ஓடிவிடும்.//
சன் டிவி இல் இருக்கும் நம்பிக்கை தெரிகிறது.. :)

பலர் படத்தில் கதையே இல்லை என்றாலும் நான் இதை ஏற்கமாட்டேன்.//
ம்ம் சரி தான்.. ஆனால் இதே கதை இன்னும் நிறையப் படத்தில் இருக்கு என்பது தான் எங்களுக்கு தெரியும்.

இந்தத் தமன்னா பற்றிய வர்ணனை எல்லாம் ரொம்ப ஓவர் தம்பி சதீஷ்.. விஜய்க்கு இவங்களே பெரிசு.. ;)
இதுக்குள்ள .. சதீஷ் என்று சொல்லி தமன்னா பிசாசிடம் என்னையும் மாட்டி விடுவார் என்று. அப்பாடா தப்பிட்டன்... இது வேறயா? ;)

பார்த்துப் பார்த்துப் புளித்த திரைக்கதை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அதில் கூட சில ரசனை இருந்தது//
இது என்னாங்க குழப்பம்..

இது விஜய்க்காக போட்டதா அல்லாது விஜயை விட இப்போ குழந்தைகளுக்கு டி.ஆரை பிடிக்குதோ//
சதீஷ்.. உங்க நேர்மை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா..

சுராவும் தமிழனும் ஒன்று..//
ஆகா.. மீண்டும் மேலே சொன்ன தே கமென்ட்.. ;)

சுறா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் அதை விடுத்து நம் பதிவர்கள் பாசையில் சொன்னால் விஜய் படம் என்ன ஆஸ்கார் படமா?//

இவ்வளவும் மேலே நீங்கள் சொல்லி விட்டு இது எதுக்கு சும்மா? அடங்குங்கப்பா.. இனியாவது

Bavan said...

//அடப்பாவிங்களா நான் சுராவை கிழித்திருக்கேன் புரிஞ்சு கொள்ளுங்க முடியல அழுதிடுவேன். விஜய் என்ன செய்தாலும் கிழிக்கிரமாதிரி இப்போ நமக்குமா?//

ஹாஹா நீங்க பாவம் கொஞ்சம் மரியாதையா கிழிச்சிருக்கிறீங்க போல மற்றவர்கள் போட்டு மிதி மிதின்னு மிதிச்சதுல உங்க SOFTடான மிதி புரியல..:p

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா..:p

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN
//உண்மையில் சுறா மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் விஜய்க்கு தோல்வியாக அமையாது. ஓடிவிடும்.//
சன் டிவி இல் இருக்கும் நம்பிக்கை தெரிகிறது.. :)//

அதுசரி சண் காப்பாற்றிதோ இல்லையோ உங்களைப்போன்ற விஜய் எதிர்ப்பாளர்கள் காப்பாற்றி விடுவார்கள்.

//பலர் படத்தில் கதையே இல்லை என்றாலும் நான் இதை ஏற்கமாட்டேன்.//
ம்ம் சரி தான்.. ஆனால் இதே கதை இன்னும் நிறையப் படத்தில் இருக்கு என்பது தான் எங்களுக்கு தெரியும்.//

உண்மைதான் அண்ணா ஆனால் இன்று வரும் பல படங்கள் ஒரே கதைதானே அசல் கூட இதில் அடங்கும். திரைகதையையாவது விறு விறுப்பாய் கொடுத்திருக்கலாம். உங்கள் இந்த கருத்தை ஏற்கின்றேன்.

//இந்தத் தமன்னா பற்றிய வர்ணனை எல்லாம் ரொம்ப ஓவர் தம்பி சதீஷ்.. விஜய்க்கு இவங்களே பெரிசு.. ;)
இதுக்குள்ள .. சதீஷ் என்று சொல்லி தமன்னா பிசாசிடம் என்னையும் மாட்டி விடுவார் என்று. அப்பாடா தப்பிட்டன்... இது வேறயா? ;)//

அண்ணா தமன்னா பற்றிய வர்ணனை என் தனிப்பட்ட கருத்தே. எல்லோருக்கும் தமன்னாவை பிடிக்கணும் என்றில்லையே. விஜய்க்கு தமன்னா ஓவரா உங்கள் இந்தக்கருத்தே உங்கள் நேர்மையை பிடிக்க வைக்கின்றது. அதுசரி நீங்கள் தமனா ரசிகராச்சே.....வாழ்க தமன்னா வளர்க அவர் வாய் சாரி புகழ்.

//பார்த்துப் பார்த்துப் புளித்த திரைக்கதை கடுப்பேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அதில் கூட சில ரசனை இருந்தது//

குழப்பம் இல்லை அண்ணா என்னை திரைக்கதை கடுப்பேற்றியது ஆனால் நான் இந்த படத்தில் ரசித்தது விஜயை மட்டுமே. இதை கவனிக்க.

//இது விஜய்க்காக போட்டதா அல்லாது விஜயை விட இப்போ குழந்தைகளுக்கு டி.ஆரை பிடிக்குதோ//
சதீஷ்.. உங்க நேர்மை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா..//

நாங்கள் உண்மையை சொல்வோம். நல்லா இல்லாவிட்டால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

//சுராவும் தமிழனும் ஒன்று..//
ஆகா.. மீண்டும் மேலே சொன்ன தே கமென்ட்.. ;)//

அதே அதே மேலே சொன்னதுதா நானும்.

//சுறா நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள படம் அதை விடுத்து நம் பதிவர்கள் பாசையில் சொன்னால் விஜய் படம் என்ன ஆஸ்கார் படமா?//

இவ்வளவும் மேலே நீங்கள் சொல்லி விட்டு இது எதுக்கு சும்மா? அடங்குங்கப்பா.. இனியாவது//

எந்த துறையில் இருந்தாலும் யாருக்கும் சறுக்கல் வருவது இயல்பு உங்களுக்கு புரியுமென்று நினைக்கின்றேன். இதனால் அடங்கத்தேவை இல்லை. ஒருவனை ரசித்தால் அவன் செய்யும் குறைகளை சுட்டிக்காட்டலாம் அதற்காக அவரை விட்டு ஓடுவதோ அல்லது குறையை சுட்டிக்காட்டாமல் இருப்பதுதான் தவறு. இது விஜய்க்கு போதாத காலம்

மேலே நான் சொன்னவை நன்றாக பாருங்கள் அதில் விஜய் எனும் ஒருவரின் மேனரிசத்ஹை மட்டுமே நான் ரசித்தேன் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சுறா எனக்கு சனியன்தான்.
இது என்னாங்க குழப்பம்.//

SShathiesh-சதீஷ். said...

@Bavan
தெரியும் தெரியும் இப்போ சாப்டா இருக்கும் மவனே காவல்காரனும் கடுப்புக்காரன் ஆனான் அப்புறம் நான் நடிக்கப்போயிடுவேன்.

"ராஜா" said...

//தொடர் தோல்விகள் தான் உங்கள் தலைக்கு ஆனால் விஜயின் தோல்வி என்று சொல்லும் படங்கள் கூட வசூலில் ஏமாற்றாது.

இது எங்க தலைக்கும் பொருந்தும் ... ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார்... எங்க தலைக்கும் உங்க ஆளுக்கும் இருக்கிற பெரிய வித்தியாசம் தல தனியா நின்னு ஜெயிப்பாரு உங்க படத்த ஓட வைக்க கலாநிதி மாறன் போல பல பேர் தேவை

//அஜித்தை பற்றி பேசக்கூடாதென நினைத்தேன் பேச வைக்கின்றீர்கள்.

நான் பின்னூட்டத்துல அசல பத்தி சொல்ல காரணம் நீங்க பதிவுல அவர வம்புக்கு இழுத்ததுதான்... நான் தலைய பத்தி எழுதுன கவிதையில தளபதி பேரு வந்ததும் நீங்க எதுக்கு அவர் பெயர் இதுல வந்ததுன்னு கோபபட்டீங்க ஞாபகம் இருக்கா? அதுல நான் விஜய் பேர்கூட எழுதல, தளபதின்னு ஒரே ஒரு வார்த்தைதான் வரும் , அதுக்கே உங்களுக்கு கோபம் வரும்பொழுது , எங்களுக்கு இந்த பதிவில் நீங்கள் அசலை வம்புக்கு இழுத்தால் கோபம் வரக்கூடாதா?

//ஒருவர் நன்றாக செய்தால் அவரை அசிங்கப்படுத்திரதென்று அர்த்தமா

நான் சொன்னதன் அர்த்தம் இந்த சொத்த கதாபாத்திரத்துல அவர நடிக்க வைக்கனும்னு சொல்றீங்களே , அது அவர அசிங்கபடுத்துற மாதிரி இருக்குன்னு ,

மத்தபடி அவரின் நடிப்பாற்றல் உலகம் அறிந்தது , விஜய் படங்களையே தன நடிப்பு திறமையால் ஹிட் ஆக வைத்தவர் அல்லவா அவர்

//////இளவரசு விஜய் புகழ் பாட வில்லனுடன். இந்த படம் பார்க்கும் போது எனக்கு நினைவு வந்தது அசல் காரணம் அதில் தல புராணம் இதில் தளபதி புராணம்

அசல் சரவண பவன் இட்லி சாம்பார் , இது புளிச்சி போன தயிர் சாதம்...//

உங்களைப் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை அஜித் திருந்தமாட்டார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல என்னது அசல் ஹி ஹி போங்க சிரிப்பு வருகுதுங்க.

என்னங்க நியாயம் உங்களோடது , சுராவ பத்தி எல்லாம் எழுதிட்டு , கடைசில படம் நல்லா இருக்குன்னு நீங்க சொன்ன அது சரி , எங்களை போன்ற அஜித் ரசிகர்களை ரசிக்கும் படியான அசல் படம் பற்றி நான் பெருமையா சொன்னா அது சிரிப்பா? நானும் சுறவை உங்களைவிட விஜயை வெறித்தனமாய் ரசிக்கும் ரசிகர்களுடன் அமர்ந்துதான் பார்த்தேன் , எனக்கு தெரியும் விஜய் ரசிகர்களின் ரியாக்சன் இந்த படத்தை பார்த்த பொழுது எப்படி இருந்தது என்று , நீங்கள் எந்த தல ரசிகனிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள் அசல் அவனை திருப்தி பட வைத்திருக்கும்... அதுக்கு அசலை பற்றிய அஜித் ரசிகர்களின் பதிவுலக விமர்சனங்களே சான்று.. நம்ப முடியவில்லை என்றால் லோஷன் அவர்களின் விமர்சனைத்தை சென்று பாருங்கள் , எங்களையாவது திருப்திபடுத்துவார் தல...

//அதில் அஜித்தை போட்டிருந்தால் பூம் பூம் மாடு மாதிரி மண்டையை ஆட்டுவின்கள்

கண்டிப்பாய் மாட்டேன் , ரஜினியுடன் யாரையும் இணைத்து பேசும் அளவுக்கு சினிமா தெரியாதவன் நான் இல்லை, தல வழி என்றும் தனி வழி , ரஜினி அளவுக்கு இனிமேல் சினிமாவில் சாதிக்க யாராலும் இயலாது , உங்கள் விஜயின் மேல் பலர் வெறுப்பு கொள்ள மிக பெரிய காரணம் அவரை ரஜினியுடன் இணைத்து பேசுவதுதான் ,

//அதுசரி தலையின் கேவலமான படத்தை பார்த்தும் உங்களைப்போல வலிக்காமல் நடிக்க அவருக்கு தெரியாதாக்கும். அப்பு நீங்களே சொல்லிட்டிங்க அசல் தல ரசிகர்கள் சிலருக்கு தான் பிடிக்குமென்று. எப்புடி

... இப்பவும் சொல்லிறேன் தல எங்களையாவது திருப்திபடுத்துவார் .... தல ரசிகர்களுக்கு பிடித்தாலே போதும் படம் வசூலாகி விடும்...

//அஜித்துக்கு இருக்கும் நல்ல மனது கூட அவர் ரசிகர்கள் உங்களுக்கு இலையே. இதுதான் கீழ் தரமென்று சொல்வது.

நீங்கள் பதிவில் அசலை வம்புக்கு இழுத்திருப்பது என்ன தரம் , நீங்க பண்ணுனா அது சரி நாங்க பண்ணுனா தப்பா? சம்பந்தமே இல்லாமல் சுறா விமர்சனத்தில் எதுக்கு அசல பத்தி எழுதுறீங்க?

கன்கொன் || Kangon said...

படம் இன்னும் பார்க்கவில்லை...

ஆகையால் கருத்து இல்லை...

பார்ப்பதா விடுவதா என்றும் இதுவரை முடிவு இல்லை.
ஆனா,
பதிவில என்ர பெயரையும் அழைத்து நானொரு பதிவர் என்பதை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள். ;)
எண்டாலும் கொலைவெறிக் கேள்வி தலைவா...
(தலைவரின்ர மருமகனும் தலைவன் தான் )

தமன்னாவ வச்சு... ஹி ஹி...
என்னா கொலைவெறி தலைவா...

ஏதோ நம்மளால முடிங்ச ஜனநாயகக் கடமையை முடிச்சிற்றுறு ஓடுறன்...

சந்திப்பம்... ;)

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்....
தேவையில்லாம comment subscribe பண்ணீற்றமோ...

என்ன கொடுமை சரவணா இது....
அவ்வ்வ்வ்...

நான் அண்டைக்கு சதீஷ் அண்ணாவின் பேஸ்புக் சுவரில் சொன்னது தான்...
மற்றும்படி இந்தவகையான பின்னூட்டங்களை வாசிக்க எனக்குச் சிரிப்பு வருகிறது.

திருந்தவேணும் நாங்கள்.
unsubscribing... :(

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

அட நீங்கள் பதிவரா நான் அதில் பதிவர் என குறிப்பிடவில்லையே. ஹி ஹி ஹி வாங்கோ வாங்கோ பார்த்திட்டு வாங்கோ

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

priyan said...

போங்க பாஸ் ஒரே சிப்பு சிப்பா வருது....

//நீங்கள் பதிவில் அசலை வம்புக்கு இழுத்திருப்பது என்ன தரம் , நீங்க பண்ணுனா அது சரி நாங்க பண்ணுனா தப்பா?

அது ஒரு மொள்ள மாறி இது ஒரு முடிச்சவிக்கி... ஏனப்பா அவனுகளுக்காக நீங்க சண்ட போட்டுகிறீங்க... விடுங்கப்பு ....

//மற்றும்படி இந்தவகையான பின்னூட்டங்களை வாசிக்க எனக்குச் சிரிப்பு வருகிறது.

எனக்கு இந்த மாதிரி பதிவ பாத்தாலே சிரிப்பு வருது

Subankan said...

வாழ்த்துகள் சதீஷ் :)

தமிழ் மதுரம் said...

ஆஹா.. அருமை.. நொந்து நூலான அனுபவம் போல இருக்கு விமர்சனத்தைப் பார்த்தால்.

அப்புறம் இப்பத் தான் சூடு பிடிக்குது போல இருக்கு விதண்டா வாதங்கள். அதெப்படிச் சதீஸ் பதிவுக்குச் சம்ப்ந்தமே இல்லாமல் ஒரு சிலர் பின்னூட்டங்கள் மூலம் போட்டுத் தாக்குகிறார்கள்?

Bala said...

ஊர்க்காரன் அடிப்பதற்கும், தாய் தன் பிள்ளையை அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த விமர்சனம். ஒவ்வொரு காட்சியையும் விமர்சித்து விட்டு விஜய் நன்றாக செய்திருக்கிறார், என்று வருடி கொடுக்கிறீர்கள். கலைஞரிடம் "உங்கள் ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது" என்று சொன்னால், அதற்க்கு பதில் கூறாமல் அதிமுக ஆட்சியில் உயரவில்லையா என்று திருப்பி கேட்பார். அதே போலதான் உங்கள் பதிவு உள்ளது. சுறா விமர்சனத்தில் அசல் எங்கே வந்தது? படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுற்றி வருவதும், விஜயின் சாகசங்கள் எல்லாம் படத்தில் ஒட்டாமல் போவதும் கடுப்பேற்றுகிறது. வடிவேலு காமெடி சுத்த சொதப்பல். நான் என் பதிவில் சுறா விமர்சனம் போடவில்லை. காரணம் நான் என்ன சொன்னாலும், உங்க தல என்ன ஒழுங்கா? பூம் பூம் மாடு என்று ஏதாவது சொல்வீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி நான் சிவகாசி படத்தை ரசித்து பார்த்தவன். இருந்தும் இந்த படத்தில் எனக்கு ஏமாற்றமே...

வந்தியத்தேவன் said...

ஹாஹா அசல் சுறா இரண்டு மொக்கையில் எந்த மொக்கை நல்ல மொக்கை என ஆராய்ச்சி செய்திருக்கிறியள் போல் தெரிகின்றது,.

தமன்னா ரொம்ப ஓவர் ஹிஹிஹி

ஜானகிராமன் said...

சதிஷ், என்னோட சுறா முன்கதையோட்டத்தோட கதையே நல்லா இருந்தது போல இருக்கு. விஜய் பேசாம நடிப்பதை நிறுத்திட்டு, அரசியலுக்கு வந்திடலாம். இப்போ தமிழக அரசியலில் காமெடியன்களுக்கு பஞ்சம் இருக்கு... இலைய தலவலிக்கு நல்ல ஸ்கோப் இருக்கு....

தர்ஷன் said...

சதீஷ் நீங்கள் விஜய் ரசிகர் என்பது எல்லாம் சரி
தயவு செய்து ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் ப்ளீஸ்
நான் அதிகம் நீங்கள் மற்றும் சகா கார்க்கியின் பதிவு அவர் முழுமையாய் இடாமல் அப்படி இப்படி மழுயப்பியிருந்தார். உங்கள் பதிவு ஓகே
நன்றி

செல்வராஜா மதுரகன் said...

@சதீஷ் அதுசரி அவரும் அசல் பார்த்து நொந்து போனவர் ஆச்சே...
என்ன சதீஷ் என்னை வம்புக்கு இழுகிறேங்கள், நான் அசல் பார்த்து நொந்தத சொன்னேனா, என்னை பற்றி பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடப் பார்க்கிறீங்கள் . முதலாவது என்னுடைய அசல் விமர்சனத்தை இங்க போய்ப் பாருங்கோ. அசல் - தல மயம் (தலட நடை போல வருமா???)

ரெண்டாவது நான் நொந்து போகேல அதிருப்தி அடைந்தேன் அதற்கு காரணம் இருக்கு எனக்கு பிடித்த நபர் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு நல்லம் என்று சொல்ல maadden ஏனென்றால் விமர்சனங்கள் நாடு நிலையாக எழுதப்பட வேண்டியவை என்பது என் கருத்து. அதற்காக உள்ளுக்குள் அஜித்தை ரசிக்க மாட்டேன் என்று நினைக்கிறீங்களா?
அடுத்து அசல் சரியில்லை என்று விட்டு வேட்டைக்காரன் பரவாயில்லை என்றால் அசலை விட வேட்டைக்காரன் நல்லம் என்று அர்த்தமா. ஒவ்வொருவரிடமும் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் அது தங்கியுள்ளது. ஒரு உதாரணம் சொல்கிறேன் ஏ.ஆர்.ரஹ்மானின் சக்கரைக்கட்டி பாடுகள் எனக்கு திருப்தி தரவில்லை அதே நேரம் தேவி ஸ்ரீ பிரசாத்தின் கந்தசாமி பாடல்கள் நன்றாக இருக்கு என்கிறேன் அதற்காக தேவி ரகுமானை விட சிறந்த இசை அமைப்பாளர் என்றாகி விடுமா? ஏனென்றால் தேவி இடம் நாம் எதிர்பார்ப்பது வேறு விதமாக அது கிடைத்து விட்டது ரகுமானிடம் வேறு விதமாக எதிர்பார்த்தேன் கிடைக்கவில்லை (இது சும்மா உதாரணம் யாரும் சக்கரைக்கட்டி பாட்டு நல்லமென்று சண்டைக்கு வந்திராதீங்கள்)
அடுத்தது எனக்கு ஒரு விடயத்தில் உங்களுடன் உடன்பாடு இல்லை. சிவாஜி எம்.ஜி.ஆர், கமல் - ரஜினி என்று இரு பிரிவுகள் இருப்பதாக கூறினீர்கள் அது பொதுவாக பார்த்தால் உண்மை போல இருக்கலாம் ஆனால் பொய். இவர்கள் வேறு பட்ட நாயகர்கள் உண்மை. சம காலத்தில் போட்டி இட்டவர்கள் உண்மை. ஆனால் எம்.ஜி.ஆர் முழுமையாக மசாலாவை நம்பி களமிறங்கினார் என்றால் பொய். அவரது பிற்காலம் அப்படித்தேரியலாம். அனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். நடிப்பிற்காக பாரதரத்னா விருதுகள் பெற்றவர். சாதாரண மசாலா நடிகர்களால் இவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றால் என்ன அர்த்தம் அவரும் நடிப்புக்கு வேலை உள்ள நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அடுத்து ரஜினி என்றால் 90 க்கு பிறகு நடித்த படங்கள்தான் பலருக்கு நினைவுக்கு varum. ஆனால் 1975 இலிருந்து 1977 வரை அவர் ஏற்ற துணை வேடங்களும், பின்னர் 90 வரை பல படங்களில் ஏற்ற முதன்மை வேடங்களும் நினைவுக்கு வரவில்லையா. அந்தப் படங்களில் ஸ்டைலுக்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கலாம் ஆனான் பெரும்பாலான படங்கள் மசாலாவை நம்பி எடுக்கப் பட்டவை அல்ல கதையம்சம் நடிப்பு என சிறந்தது விளங்கிய படங்கள். ரஜினி கமல் இணைந்து நடித்த 17 படங்களை மறந்திட்டிங்களா. கேட்ட லிஸ்ட் பண்றேன் நடிப்பு கதையம்சத்தை முன்னிறுத்தி ரஜினி நடித்த படங்களை. அவரது 100 அவது படம் ராகவேந்திரா அது எடுக்கப் பட்ட நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் விஜயின் 50 அவது படம் சுறா பாரத்தின் 12 ஆவது படம் பழனி விஷாலின் 2 ஆவது படம் சண்டைக்கோழி இப்ப சொல்லுங்கோ தமிழ் சினிமா எங்க போகுது ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரே தன்னோட சினிமாட கடைசி 10-15 வருஷத்தை தான் மசாலாவில் தனியே செலவிட மசாலாவுடனே பிறக்கும் இன்றைய நாயகர்களை என்ன செய்ய ? ?

Bala said...

@ செல்வராஜா மதுரகன்

இதற்கு சதிஸ் சொல்லும்பதில் என்ன வென்றால், ரஜினி கஷ்டப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அடைந்த இடத்தை, விஜய் தனது ஐம்பதாவது படத்திலேயே தொட்டுவிட்டார் என்று வயித்தெரிச்சல். சரியா?

SShathiesh-சதீஷ். said...

@priyan

//போங்க பாஸ் ஒரே சிப்பு சிப்பா வருது....
//

அப்போ சிரிங்க

////நீங்கள் பதிவில் அசலை வம்புக்கு இழுத்திருப்பது என்ன தரம் , நீங்க பண்ணுனா அது சரி நாங்க பண்ணுனா தப்பா?

அது ஒரு மொள்ள மாறி இது ஒரு முடிச்சவிக்கி... ஏனப்பா அவனுகளுக்காக நீங்க சண்ட போட்டுகிறீங்க... விடுங்கப்பு ....
//

அப்போ நீங்கள் எந்த முடிச்சுவிக்கியை பற்றி எழுதினால் சந்தோசப்படுவீர்கள்.

////மற்றும்படி இந்தவகையான பின்னூட்டங்களை வாசிக்க எனக்குச் சிரிப்பு வருகிறது.

எனக்கு இந்த மாதிரி பதிவ பாத்தாலே சிரிப்பு வருது//

இப்பிடி சொல்லிட்டு இதேபோல விமர்சனம் போட்ட உங்களை பார்த்தல் எனக்கு சிரிப்பு வருதுங்க.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

என்ன அண்ணே நக்கலா? இப்போ எதுக்கு வாழ்த்துக்கள்

SShathiesh-சதீஷ். said...

@கமல்

ரொம்ப சுட்டிடிச்சன்னே. எனக்கும் புரியல. சுறா எனக்கு பிடிக்கவில்லை அதை நான் சொன்னாலும் சுறா ஏதோ காவியம் என்பது போல நான் சொல்லிட்டன் என்று எண்ணி தாக்குகின்றார்கள். இது விஜய் மீதான தாக்குதல் என எண்ணுகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

நான் அடிச்சிருக்கிறது உங்களுக்கு புரிதா? அப்பாடா? தப்பிச்சன்உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ் சினிமா நாயகர்கள் பலர் திருந்த வேண்டும்.

SShathiesh-சதீஷ். said...

@ஜானகிராமன்

கருத்துக்கு நன்ற். விஜயின் தற்போதைய பாதை சலிப்பைக்கொடுத்தாலும் மீண்டு வருவார் என நம்புவோம். அதுவே தமிழ் சினிமாவிற்கும் நல;ளது. இது விஜய் ரசிகனாக இல்லாமல் ஒரு சினிமா ரசிகனாக என் கருத்து

SShathiesh-சதீஷ். said...

@தர்ஷன்
ரஜினியுடன் ஒப்பிடிவது என்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. காரணம் அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய் தான் முன்னணியில் இருக்கின்றார். இன்று இப்படி வெத்து வேட்டுப்படங்கள் கொடுத்தாலும் கலெக்சன் ஏமாற்றவில்லையே.

SShathiesh-சதீஷ். said...

@செல்வராஜா மதுரகன்

வாங்கோ அண்ணே அஜித் உங்களை அசலில் திருப்திப்படுத்தவில்லை என்பது உண்மைதானே. அது உங்களை பாதிக்கவில்லையா இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என சொள்ளவைகவில்லையா இது உங்கள் மனதில் இருந்து வந்த நோதானே. உங்கள் கருத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@Bala

அண்ணே எப்பிடி அண்ணே இப்பிடி? ஐ நான் அப்பிடி சொல்லாமல் தப்பிச்சிட்டனே.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive